திறமை - TALENT
வணக்கம் நண்பர்களே!!! மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். ஆனால் பலர் அவர்களுடைய திறமையை அறிவதில்லை, சிலர் அதை அறிந்தும் வெளிக்கொண்டுவருவதில்லை. நம் திறமையை நமக்கு மட்டும் தெரிந்து, மற்றவர்கள் அறியவில்லை என்றால் நம் திறமை குன்றின்மேல் இட்ட விளக்காக இல்லாமல் குடத்திலிட்ட விளக்காக மாறிவிடும். நம் திறமையால் நமக்கும் பயனில்லை இந்த சமுதாயத்திற்கும் பயனில்லை. நம்மில் எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்கும், நம் தலையில் சீப்பை வைத்துக்கொண்டே வீட்டின் எல்லா இடங்களிலும் தேடியிருபோம். இதேபோல்தான் நம்மிடம் இருக்கும் திறமையை உணராமல் மற்றவர்களின் உதவியை தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சற்றே அமைதியாக யோசித்தால் நாம் தேடும்பொருளையும் நம் திறமையும் கண்டறிய முடியும். நம் திறமையை நாம் அறியாமல் மற்றவர்கள் அறியும் நிலை ஏற்பட்டால் நாம் கண்...