திறமை - TALENT



வணக்கம் நண்பர்களே!!!

            மனிதனாய் பிறந்த  எல்லோருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். ஆனால் பலர் அவர்களுடைய திறமையை அறிவதில்லை, சிலர் அதை அறிந்தும் வெளிக்கொண்டுவருவதில்லை.


            நம் திறமையை நமக்கு மட்டும் தெரிந்து, மற்றவர்கள் அறியவில்லை என்றால் நம் திறமை குன்றின்மேல் இட்ட விளக்காக இல்லாமல் குடத்திலிட்ட விளக்காக மாறிவிடும். நம் திறமையால் நமக்கும் பயனில்லை இந்த சமுதாயத்திற்கும் பயனில்லை.


            நம்மில் எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்கும், நம் தலையில் சீப்பை வைத்துக்கொண்டே வீட்டின் எல்லா இடங்களிலும் தேடியிருபோம். இதேபோல்தான் நம்மிடம் இருக்கும் திறமையை உணராமல் மற்றவர்களின் உதவியை தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சற்றே அமைதியாக யோசித்தால் நாம் தேடும்பொருளையும் நம் திறமையும் கண்டறிய முடியும்.


            நம் திறமையை நாம் அறியாமல் மற்றவர்கள் அறியும் நிலை ஏற்பட்டால் நாம் கண்ணிருந்தும் குருடர்களே, அதுமட்டும் இல்லாமல் நம் திறமைகளை மற்றவர்கள் உறிஞ்சும் நிலைக்கு கூட நாம் தள்ளப்படலாம்.


இது சம்பந்தமான கலாம் ஐயாவின் கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது.

"நாம் அனைவர்க்கும் ஒரே மாதிரி 

திறமை இல்லாமல் இருக்கலாம்,

ஆனால் அனைவர்க்கும் 

திறமையை வளர்த்துக்கொள்ள 

ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளது."


வாழ்வில் நமக்கு கொடுக்கப்பட்ட நேரங்கள் இன்னும் உள்ளது அந்த நேரத்தை எப்படி மாற்றுவது என்பது உங்கள் கையில்தான் உள்ளது....


விலைமதிப்பற்ற உங்களுடைய நேரத்தில் என்னுடைய பதிவை வாசித்ததற்கு நன்றி!!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என்றால் உங்களுடைய நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் SHARE செய்யுங்கள். இதேபோல் நான் எழுதும் பதிவு உங்களுக்கு வரவேண்டும் என்றால் FOLLOW பண்ணுங்க.

 

நன்றி நண்பர்களே 🙏🙏............

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாம் ஏன் கற்கிறோம்? எதை கற்கிறோம்? எதற்காக கற்கிறோம்?

"சில நேரத்தில் சில மனிதர்கள்"

INTERESTING FACTS IN TAMIL/ENGLISH