சிரித்து பழகு!!!!!
சிரித்து பழகு😄😆😃 !!!!! வணக்கம் நண்பர்களே 🙏! இது என்னுடைய இரண்டாவது பதிவு. என்னுடைய முதல் பதிவிற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல. இந்த பதிவை வாசித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலைகள். “ பணம் இல்லாதவனுக்கு பணம் இல்லையே என்கிற கவலை! ” “ பணம் இருப்பவனுக்கு உடல்நிலை சரியில்லை , மனநிலை சரியில்லை என்கின்ற கவலை! ” மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கவலை என்பது ஒரு ஒட்டுண்ணி போல நம்மை எப்பொழுது ஒட்டிக்கொண்டே இருக்கும். இதை நினைக்கும்போது எனக்கு ஒரு சிறுகதை நியாபகம் வருகிறது. காலை நேரம் 🌞🌅- புத்தர் கையில் ஒரு துணியுடன் வந்து சீடர்கள் முன் மேடையில் அமர்ந்தார். எதுவும் பேசாமல் , அந்த துணியில் முடிச்சுகளை போட ஆரம்பித்தார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஐந்து முடிச்சுகளை போட்டபிறகு தலை நிமிர்த்து பேச ஆரம்பித்தார். ' சீடர்களே ...இப்போ நான் ஐந்து முடிச்சுகளை போட்டேன் ; இதை அவிழ்க்க போ...