சிரித்து பழகு!!!!!
சிரித்து பழகு😄😆😃 !!!!!
வணக்கம்
நண்பர்களே 🙏!
இது என்னுடைய இரண்டாவது பதிவு. என்னுடைய முதல் பதிவிற்கு ஆதரவு
தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல.
இந்த பதிவை வாசித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
கவலைகள்.
“பணம் இல்லாதவனுக்கு பணம் இல்லையே என்கிற கவலை!”
“பணம் இருப்பவனுக்கு உடல்நிலை சரியில்லை, மனநிலை சரியில்லை என்கின்ற கவலை!”
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கவலை என்பது ஒரு
ஒட்டுண்ணி போல நம்மை எப்பொழுது ஒட்டிக்கொண்டே இருக்கும். இதை நினைக்கும்போது எனக்கு
ஒரு சிறுகதை நியாபகம் வருகிறது.
காலை நேரம் 🌞🌅-
புத்தர் கையில் ஒரு துணியுடன் வந்து சீடர்கள் முன் மேடையில்
அமர்ந்தார். எதுவும் பேசாமல், அந்த துணியில் முடிச்சுகளை போட ஆரம்பித்தார். சீடர்களுக்கு ஒன்றும்
புரியவில்லை.
ஐந்து முடிச்சுகளை போட்டபிறகு தலை நிமிர்த்து பேச ஆரம்பித்தார்.
'சீடர்களே ...இப்போ நான் ஐந்து முடிச்சுகளை போட்டேன்; இதை அவிழ்க்க போகிறேன். அவிழ்ப்பதற்க்கு
முன் உங்களிடம் இரண்டு கேள்வி கேட்கபோகிறேன்.
"முதல் கேள்வி என்னவென்றால் முன் நான் வைத்திருந்த துணியும், முடிச்சு விழுந்த துணியும் ஒன்றுதானா?" என்று கேட்டார்.
உடனே ஒரு சீடன் எழுந்து, "பெருமானே ....ஒரு வகையில் எல்லாம் ஒண்ணுதான். முடிச்சுகள்
மட்டும்தான் அதில் வித்தியாசம்.....
"முன்பு இந்த துணி,சுதந்திரமுடையது. முதல் முடிச்சு
விழுந்ததும், அதன்
சுதந்திரம் போயிட்டுது
இப்போ இந்த துணி அடிமை பட்டு கிடக்கிறது
......" என்றான்.
புத்தர், ஆம் நீ சொல்வது சரிதான் நாம் பிறக்கும் போது சுதந்திரமாக இருந்தோம், ஆனால் முடிச்சுப் போட்டுக்கிட்டு, சிக்கலில் மாட்டிக்கொண்டு அடிமைப்பட்டு
போகிறோம். இதுலே சிக்கி, தனிமைப்பட்டு போகிறோம், நான் இதைத்தான் உங்களுக்கு தெரிவிக்க விரும்பினேன் என்றார்.
சரி இந்த முடிச்சுகளை அவிழ்ப்பது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.
இன்னொரு சீடன் எழுந்து, முடிச்சு போட்ட முறை தெரிந்தால் அவிழ்ப்பது சுலபம் என்றான்.
புத்தர்," நீ சொல்வது சரிதான், இதுதான் வாழ்க்கை. இந்த
முடிச்சுகள்தான் வாழ்க்கையின் சிக்கல் ...நம்முடைய சிக்கலுக்கு நாம் தான் காரணம்.
நம்மை அறியாமல், நாம்
போடுகின்ற முடிச்சுகளிலே சிக்கி, சிக்கலை அவிழ்க்க முடியாமல்
திணறிக்கிட்டு இருக்கிறோம்...." என்று முடித்தார், புத்தர்.
இப்படித்தான் நம்முடைய கவலைகளுக்கு நம்மிடம் மட்டுமே தீர்வு உள்ளது. ஆனால் நாம் அதை அறிவதில்லை.
நாம் எப்படி சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு என்று நேரம் ஒதுக்குகின்றோமோ அதேபோல் நம்முடைய
கவலைகளின் தீர்வை கண்டறிய சிறிது நேரம் ஒதுக்கவேண்டும். அப்பொழுதுதான்
நம்முடைய கவலைகளின் தீர்வை நாம் கண்டறிய முடியும்.
சிரித்து பழகு ✌😄✌!!!!!!
"உங்களுக்கு எப்பொழுது சிரிக்க
தோன்றுகிறதோ அப்பொழுது உடனடியாக சிரித்துவிடுங்கள். முடிந்தவரை மற்றவர்களை சிரிக்க
வைய்யுங்கள்.
மற்றவர்களை சிரிக்க வைக்கும்போதுதான், தன்னுடைய கஷ்டங்களையும் மறக்கிறோம், மற்றவர்களின் கஷ்டங்களையும் மறக்க செய்கிறோம். இதுவே மற்றவர்களுக்கு
நம் செய்யும் பெரிய உதவி. "காசு கொடுத்து உதவுவது மட்டுமல்ல உதவி, மற்றவர்களை சிரிக்க வைப்பதும் ஒரு
பெரிய உதவிதான்.
"தன்னை கேலி செய்பவர்களை பார்த்து கவலைகொள்ளவேண்டாம்!”
“தன்னால் ஒருவன் அவனுடைய கவலைகளை மறந்து சிரிக்கிறானே என்று சந்தோசம்
கொள்ளவேண்டும்!”
கஷ்டங்களை கடந்துசென்று, சிரிக்க கற்றுக்கொண்டு, பிறர் சிரிக்க உதவுவோம்!!!!
இந்த
பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என்றால் உங்களுடைய நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் SHARE செய்யுங்கள். இதேபோல் நான் எழுதும்
பதிவு உங்களுக்கு வரவேண்டும் என்றால் FOLLOW பண்ணுங்க.
நன்றி
நண்பர்களே 🙏🙏............
Good
பதிலளிநீக்குsuper
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குUseful for life.
பதிலளிநீக்கு