நாம் ஏன் கற்கிறோம்? எதை கற்கிறோம்? எதற்காக கற்கிறோம்?
நாம் ஏன் கற்கிறோம்? எதை கற்கிறோம்? எதற்காக கற்கிறோம்?
இன்றைய குழந்தைகள் இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் அறியாமலே கல்வி
கற்கின்றனர்.
"கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்று நம் முன்னோர்
சொல்லிச்சென்றனர் ஆனால் இக்காலகட்டத்தில் கற்றோர் தனது எதிர்கால பாதையை கண்டறியவே
கடினப்படுகின்றனர்.
நம் ஏன் கற்கிறோம்?
இந்த கேள்வியை மாணவர்களிடம் கேட்டால் "படிப்பது வேலைக்கு
செல்வதற்கு மற்றும் சம்பாதிப்பதற்கு" என்று மட்டுமே 85% மாணவர்கள் பதிலளிக்கின்றனர்.
ஆனால் நாம் ஏன் கற்கிறோம்? இந்த கேள்விக்கு மூன்று முக்கியமான
நோக்கங்கள் உள்ளன.
1. நமது அறிவு பற்றாக்குறையை
குறைக்க.
2. ஒழுக்கம், மனவலிமை என வாழ்க்கைக்கு முக்கியமானவற்றை மேம்படுத்த.
3. உங்கள் ஆர்வத்தை பூர்த்திசெய்து , உங்கள் சுதந்திரம் அல்லது செயல்திறனை அதிகரிக்க.
முன்பு அரசர்கள் தங்களது
புதல்வர்களை குருக்களிடம் அழைத்துச்சென்று அரசபதவிக்கு தேவையான வில்வித்தை, நல்லொழுக்கம்,
ஆட்சிமுறை
ஆகியவற்றை சிறந்தமுறையில் கற்கச்செய்தனர்.
ஆனால் இக்காலகட்ட குழந்தைகள் தான் பள்ளியில் கற்பது தனது
எதிர்காலத்தில் எந்தவகையில் உதவபோகிறது என்று அறிந்துகொள்ளாமலே கற்கின்றனர்.
85% மாணவர்கள், வேலைக்கு சென்று சம்பாதிப்பதற்காகவே கற்கிறோம் என்று
சொல்லும் மாணவர்கள் தான் படித்த வேலைக்கு செல்வதில்லையே!
எதை கற்கிறோம்?
இக்காலக்கட்ட முக்கால்வாசி குழந்தைகள் கணிதத்தை பார்த்து ஓடுகின்றனர்.
ஆனால் அன்றோ! கணிதத்தை சுவைத்தனர் தனது வாழ்க்கையோடு ஒப்பிட்டு
கற்றனர்.
அன்றோ! கணிதத்தில் இருந்து "தனது அனைத்து பிரச்சனைகளுக்கும்
தீர்வு உண்டு" என்று வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்தார்கள்.
அதனால்தான் பல கணிதமேதைகள் உருவாகினார்கள் அனால் இன்று கணிதத்தை ஒரு
பூதம்போல் நினைத்து பயந்து ஓடுகின்றனர்.
எதற்காக கற்கிறோம்?
எதை கற்கிறோம்? எதைக்காக கற்கிறோம்? முதலில் இந்த இரண்டு கேள்விகளையும் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.
இன்றைய மக்கள் கல்வியை பற்றி
குறைசொல்ல ஆரமித்தால் முதலில், நமது Education
System பற்றி மட்டுமே குறை சொல்கின்றனர்.
எந்த ஒரு மனிதன் குறைகளை மற்றதின் மீது சொல்கிறானோ அவனிடம்
இருக்கும் குறைகளை மறைக்கிறான் என்று அர்த்தம்.
நம் முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் நம்மால் நமது Education
System- மை
மாற்ற இயலாது ஆனால் நம்முடைய Education method- டை மாற்றமுடியுமே!
ஆனால் நாம் அதை முயற்சிப்பத்தில்லையே மாறாக மற்றவர்கள் மீதே
குறைசொல்லி பழகிவிட்டோம்.
இன்றையகாலகாட்டத்தில் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்றவனே பெண்களை
பாலியல் வன்கொடுமை செய்கிறான் இப்படிப்பட்ட அரக்கன் பள்ளிக்கு சென்று என்ன பயன்?
மாவட்ட அளவில் மதிப்பெண் எடுத்த மாணவன் "தன்னால் மருத்துவராக
முடியவில்லையே! என்று தற்கொலை செய்து கொள்கிறான்"
அவனுடைய
பள்ளியில் கல்வியை மட்டுமே கற்பித்துள்ளனர், மனதைரியத்தை கற்பிக்கவில்லை.
இப்படிப்பட்ட
முறையில் தான் நாம் கல்வி கற்கிறோம்.
"கல்வி முறை மாற வேண்டும் என்று நினைப்பவன் நினைத்துக்கொண்டே இருப்பான்".
"கல்வி முறையை மாற்ற
வேண்டும் என்று நினைப்பவனே மாற்றத்தை உண்டாக்குவான்".
"மாற்ற நினைப்போம்! மாற்றத்தை உண்டாக்குவோம்!"
கற்றலின் பற்றிய உங்களுடைய கருத்துக்களை முக்கியமாக பதிவிடவும்.
அருமை 👌👌
பதிலளிநீக்குநல்ல அர்த்தமுள்ள வலைப்பதிவு
பதிலளிநீக்குசிறப்பு
பதிலளிநீக்குஅருமை சகோதரி 💐💐💐
பதிலளிநீக்குSuper paa
பதிலளிநீக்குVera level uh 🔥❤️💯
பதிலளிநீக்குSuperb
பதிலளிநீக்குஅருமை👏keep doing and rocking 😇
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்கு👌
பதிலளிநீக்கு