"சில நேரத்தில் சில மனிதர்கள்"
முதல் பாகத்தில் பல மனிதர்களின் பலவிதமான சிந்தனைகள், வாழ்க்கைநிலை, உணர்ச்சிகள் என அனைத்தையும் அழகாக எடுத்துக் கூறியிருந்தார் இயக்குனர்.
இரண்டாம் பாகத்தில் கதை விறுவிறுப்பாக சென்றது. ஒருவரால் ஏற்படும் விளைவுகளை எப்படி பல மனிதர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது (Butterfly Effect) என்பதை அழகாக எடுத்துக் கூறியிருந்தார்.
இப்படத்தின் இறுதியில் இயக்குனர் ஒவ்வொரு மனிதர்கள் செய்யும் தவற்றை எப்படி அவர்கள் மனதளவில் ஒப்புக் கொள்கிறார்கள் என்பதை அழகாக கூறியிருந்தார்.
இந்த படத்தை பார்த்ததும் என் மனதில் பல கேள்விகள் எழுந்தன, ஆனால் அதற்கு எனக்கு விடை தெரியவில்லை.
இக்காலகட்டத்தில், நம்முடன் இருக்கும் அம்மா, அப்பா, நண்பர்கள், உறவினர்கள் என அவர்களின் உணர்வுகளை நாம் அறியாமல், அவர்களிடம் உட்கார்ந்து பேசிக் கொள்ளாமல் ஒரு மனித இயந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மாறுபாடாக நம்மை அறியாத, நமக்கு தெரியாதவர்கள் வாழ்க்கையை அறிந்து கொள்ள நாம் ஆர்வம் காட்டுகிறோம் அதாவது YouTube lifestyle vlogs, Reality shows like Bigg Boss என நம் நேரத்தை வீணாக செலவிடுகிறோம்.
நாம் காதல், உறவு, பாசம் என்னும் அன்புச்சிறையில் இருக்கும் வரையில்தான் நாம் மனிதர்கள் அதை விட்டு வெளியே வந்து விட்டோம் என்றால் நாம் உயிருள்ள இயந்திரங்களை!!!...
விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.🙏🙏
கருத்துகள்
கருத்துரையிடுக